For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சோ' சிறந்த தேசியவாதி, பன்முகத் தன்மை கொண்டவர்… மோடி புகழாரம்

பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல் எழுத்தாளரான சோ என்ற ராமசாமி இன்று அதிகாலையில் மறைந்தார். அவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ ராமசாமி மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார்.

PM Modi condolence to Cho Ramasamy on Twitter

மறைந்த பத்திரிக்கையாளர் சோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். சோ சிறந்த தேசியவாதி, பன்முகத் தன்மை கொண்டவர், அச்சமின்றி பேசக்கூடியவர் என்று பிரதமர் புகழஞ்சலி கூறியுள்ளார்.

இதை எல்லாம் தாண்டி அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் துக்ளக் பத்திரிகையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் வாசகர் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். அவருடைய மறைவு என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எண்ணற்ற துக்ளக் வாசகர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Modi twitted his condolence to Cho Ramasamy, who died early morning today in Chennai Apollo Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X