அத்வானி பிறந்த நாள்.. மோடி, அமித்ஷா நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 89வது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 89வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்திய பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித்ஷாவும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. 1927ம் ஆண்டு, தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தவர். 1998 ஆம் ஆண்டில் இருந்து 2004 வரை உள்துறை அமைச்சராக இருந்தவர். இவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது துணை பிரதமராகவும் இருந்தவர். இவருக்கு இன்று 89வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு, பாஜகவின் மூத்த தலைவர்களும் முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

PM Modi greets BJP leader Advani on birthday

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் நேரில் சென்று அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, "எங்களது வழிகாட்டியும், முன்னோடியுமான எல்.கே. அத்வானி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியாவின் மிக உன்னத தலைவரான அத்வானி நம் நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு சேவையாற்றியுள்ளார். அத்வானி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+