For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளை அடிப்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வர துடிக்கிறது… பிரதமர் மோடி பிரச்சாரம்

Google Oneindia Tamil News

குஜராத்: மீண்டும் நாட்டை கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வர காங்கிரஸ் துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜுனாகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் பெருமை கொள்கிறீர்களா என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

PM Modi in Junagarh, Gujarat: A new name has been added to the list of corruption by Congress

கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தமிழிசை- ஸ்டாலின் நக்கல்கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தமிழிசை- ஸ்டாலின் நக்கல்

ஏழை குழந்தைகளிடம் இருந்து உணவைப் பறித்துக் கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே வயிற்றை நிரப்பி கொண்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அகராதியில் உள்ள அத்தனை தவறான வார்த்தைகளையும் தனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய மோடி, அந்த தாக்குதலால் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சாடினார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்திற்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

இதற்கு முன்பு, கர்நாடகாவை பணம் தரும் எந்திரமாக காங்கிரஸ் கட்சி கருதியதாகவும், தற்போது மத்தியப் பிரதேசத்தையும் அவ்வாறு கருதுவதாகவும் கூறிய மோடி, ராஜஸ்தானும், சட்டீஷ்கரும் விதிவிலக்காக இருக்க முடியாது என்றார்.

English summary
PM Modi in Junagarh, Gujarat: I have come here to give you an account of the work done in 5 years. I have come here to take your order for the next 5 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X