ஜாக்பாட்.. வைஃபை வசதி உள்பட குஜராத்தில் ரூ.5,206 கோடி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
காந்திநகர்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ள நிலையில் இன்று ரூ.5,206 கோடி மதிப்பில் கிராம வைஃபை வசதி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
குஜராத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேந்திர படேல் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் வந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்றார். 2 நாளான இன்று பிரதமர் மோடி ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான விழா என்பது சோட்டா உதேபூரில் இன்று நடந்தது.
இதில் ரூ.4,505 கோடி மதிப்பிலான திட்டம் என்பது மிஷன் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்பதாகும். இதன்மூலம் புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், நவோதயா வித்யாலயா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 9,088 புதிய வகுப்பறைகள், 50,300 ஸ்மார்ட் வகுப்பறைகள், 19,600 கணினி ஆய்வகங்கள், 12,622 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துதல் உட்பட, 3,079 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்ட திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டது.
அதோடு குஜராத் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் 7,500 கிராமங்களில் 20 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் கிராம வைஃபை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர குஜராத் தாஹோடில் புதிய நவோதயா வித்யாலயாவை ரூ.23 கோடி செலவில் தொடங்கிப்பட்டுள்ளது. நீர் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications