இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே இருக்க கூடாது என்பது காந்தியின் விருப்பம்: ராஜ்யசபாவில் மோடி விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மக்களவையில் காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு- வீடியோ

  டெல்லி: காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது மகாத்மா காந்தி விரும்பியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் மோடி பேசியதாவது:

  PM Modi responds to criticism in the Rajya Sabha

  ஆரோக்கியம், மற்றும் சுகாதார விஷயங்களில் நாட்டில் இன்னும் நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டு சுகாதார விஷயங்கள் மெருகேற்றப்படும்.

  எதிர்க்கட்சிகள் எங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டும் என்று கூறுகிறீர்கள். நானும் அதையேத்தான் சொல்கிறேன். நாடு சுந்திரம் அடைந்ததுமே காங்கிரஸ் கட்சி இனி தேவையில்லை என்றுதான் காந்தி கூறினார்.

  எனவேதான் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற கோஷத்தை மோடியுடையது என நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அது காந்தியினுடைய ஐடியா. விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதம். புதிய இந்தியா வேண்டாம் என்று சொல்கிறீர்களே உங்களுக்கு எமெர்ஜென்சி காலத்து இந்தியாதான் வேண்டுமா?

  ரயில்வே பட்ஜெட்டிலும் நாங்கள் மாற்றம் கொண்டு வந்தோம். வழக்கமாக நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும், ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

  எனவேதான், நாங்கள் செயலில் மட்டும் ஈடுபடுகிறோம். நாங்கள் பெயரை மட்டுமே மாற்றிக்கொண்டு உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டினீர்கள். நீங்கள் குழந்தைகளை போல அடம் பிடிக்கிறீர்கள். தோற்க ஆரம்பித்ததும், குழந்தைகள் விளையாட்டின் விதிமுறையை மாற்றுவதை போல மாற்ற தொடங்குகிறீர்கள்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  During Gujarat elections, everywhere Congress used Sardar Patel's name - I was happy that we got to see that too, Modi says as BJP members chuckle. But after the elections, in none of the programs, you mentioned or used Mr. Patel's or Dr. Ambedkar's name. When you accuse us for something, when you point one finger at us, remember that four fingers are pointing at you too.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற