பிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Prime Minister Narendra Modi's 69th Birthday today

    அஹமதாபாத்: இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் தனது தாயாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளை சொந்த மண்ணான குஜராத்தில் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு அஹமதாபாத் வந்தார். அஹமதாபாத் விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.

     PM Modis 69th birthday: modi to celebrate the day with his mother and supporters

    நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை முழுகொள்ளளவான 138 அடியை எட்டியதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஏற்பாடு செய்த நர்மதா தேவி பூஜையில் பங்கேற்றார். அதன்பின்னர் சர்தார் சரோவர் அணையை சுற்றி பார்த்தார். ஒற்றுமையின் சின்னமான படேலின் சிலையையும் பார்வையிட்டார்.

    இதன்பின்னர் காந்தி நகர் திரும்பிய மோடி, தனது தயார் ஹீராபென்னை சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பின்னர் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

     PM Modis 69th birthday: modi to celebrate the day with his mother and supporters

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் சேவை வாரமாக இந்த வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் பல்வேறு இடங்களில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்துகிறார்கள்.

    பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான வாரணாசியில் வசிக்கும் அரவிந்த் சிங், மோடியின் பிறந்த நாளுக்காக சங்கட் மோச்சன் கோவில் அனுமனுக்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதால் இந்த வேண்டுதல் நிறைவேற்றி உள்ளாராம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+