Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தகனத்தின் போது.. உடைந்து அழுத மோடி.. கையெடுத்து கும்பிட்டு.. இறுதிச்சடங்கு மேடையில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை 9.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது பிரதமர் மோடி கண்ணீருடன் காணப்பட்டார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார். இதன் காரணமாக ஹீராபென் மோடி குஜராத்தில் இருக்கும் யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களாக ஹீராபென் உடல்நிலை நலிவடைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் ஹீராபென் உடல்நிலை இன்னும் மோசமானது. ஹீராபென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு வயிற்று போக்கு, கடுமையான உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி ப்ரோடோகால்

பிரதமர் மோடி ப்ரோடோகால்

இன்று பிரதமர் மோடி காரில் தாயார் ஹீராபென் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது எப்போதும் பின்பற்றப்படும் ப்ரோடோகால் முறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுவாக பிரதமர் மோடி ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரை சுற்றி எஸ்பிஜி அதிகாரிகள் இருப்பார்கள். அதோடு closed contact பாதுகாப்பு குழு ஒன்றும் இருக்கும். இவர்கள் மட்டுமே மோடியை நெருங்க முடியும். மற்ற யாரும் மோடியை நெருங்க முடியாது. மோடியை சந்திக்கும் பெரிய தலைவர்கள் மட்டுமே பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.

மீறல்

மீறல்

ஆனால் இன்று அப்படி ப்ரோடோகால் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஏனென்றால் பிரதமரின் தூரத்து உறவினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொது மக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதேபோல் பிரதமர் மோடிக்கு அருகில் பலர் இன்று நின்றனர். பொதுமக்கள் பலரும் கூட இறுதிச்சடங்கின் போது பிரதமர் மோடிக்கு அருகில் நின்றனர். சிலர் செல்பி எடுக்க கூட முயன்றனர். ஆனால் இதற்கு எஸ்பிஜி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு என்ற எஸ்பிஜி அதிகாரிகள் சில பிளான்களை வைத்து இருப்பார்கள். அதை பின்பற்றி இன்று பிரதமர் மோடிக்கு நெருக்கமாக நின்று பாதுகாப்பு வழங்கினார்கள்.

ஆம்புலன்சில் வணக்கம்

ஆம்புலன்சில் வணக்கம்

இன்று முதலில் ஆம்புலன்சில் தனது தாயாரின் உடலுடன் பிரதமர் மோடி தனியாகவே சென்றார். அதன்பின்தான் எஸ்பிஜி அதிகாரிகள் சில மீட்டர்களுக்கு பின் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறினார்கள். முதலில் பிரதமர் மோடி ஆம்புலன்சில் தனியாக செல்வதாகவே இருந்தது. எஸ்பிஜி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் பின் பக்கம் தொற்றிக்கொள்வதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி கடைசியில் அதிகாரிகள் உள்ளே அமர்ந்து கொண்டனர். இந்த பயணம் முழுக்க மோடி கைகூப்பி வணங்கியபடி காணப்பட்டார். தனது தாயாரை கை கூப்பி வணங்கியபடி மோடி இருந்தார்.

மக்கள் வணக்கம்

மக்கள் வணக்கம்

அதேபோல் வெளியே இருந்த மக்களும் இந்த வாகனத்தை வணங்கியபடி இருந்தனர். ஆம்புலன்சில் இருந்து இறங்கி தகன மேடைக்கு பிரதமர் மோடி தனது தாயாரின் உடலை சுமந்து சென்றார். அவரின் உயரம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் அவரின் பக்கம் தாயாரின் உடல் சாய்ந்து இருந்தது. பிரதமர் மோடி தாயாரை தூக்கி செல்கையில், வழியில் பொதுமக்கள் பலர் வரிசையாக நின்றனர். பொது மக்கள் நின்றபடி அவருக்கு மரியாதையை செய்து, இறந்த ஹீராபென் உடலை பார்த்து வணக்கம் வைத்தனர்.

கண்ணீர்

கண்ணீர்

பிரதமர் மோடி தாயாரின் உடலுக்கு அதன்பின் தகன மேடையால் இறுதி மரியாதையை செய்தார். கடைசியாக உடலை சுற்றி வந்தார். அப்போது பிரதமர் மோடி உடைந்து கண்ணீர்விட்டார். இதையடுத்து ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இன்று பிரதமர் மோடி கொல்கத்தா செல்வதாக இருந்தது. வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க அவர் கொல்கத்தா செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஆன்லைன் வழியாக குஜராத்தில் இருந்தே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+