Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பா.ஜ.க தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் என்றும், ராகுல் காந்தியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோரின் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது தோல்வி அடைகிறார்களோ, அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எப்படி 40 ஆண்டுகள் இருந்ததோ, அப்படியே பா.ஜ.கவுக்கும் இருக்கும். அவர்கள் எங்கும் செல்லமாட்டார்கள். தேசிய தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எண்ணிக்கை பெற முடியும் எனில், அவர்கள் அவ்வளவு எளிதில் எங்கும் செல்லமாட்டார்கள்.", என்று கூறியுள்ளார்.

கோவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், "மக்கள் மோதியின் மீது ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் மோதியை தூக்கி எறிவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை, அவர்கள் மோதியை தூக்கி ஏறிவது சாத்தியமே. ஆனால், பா.ஜ.க எங்கும் போகாது. இந்த கட்சி இன்னும் சில பத்தாண்டுகள் வரை அரசியலில் இருக்கும். மக்கள் அவரை தூக்கி ஏறிவார்கள் என்று ராகுல் காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அப்படி எதுவும் நடக்காது.', என்று தெரிவித்துள்ளார்.

Prasanth Kishor says, If people throw away Modi, BJP will be at centre of Indian politics and bjp Wont go anywhere

மேலும் அவர் பேசுகையில், "உங்களால் மோதியை புரிந்துகொள்ளாதவரை, அவரின் பலத்தை புரிந்துகொள்ளாத வரை, அவரை தேர்தலில் தோற்கடிக்க உங்களால் திட்டம் வகுக்க முடியாது. நான் பார்க்கும் சிக்கல் என்னவென்றால், அவரின் பலத்தை ஆட்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது, அவர் எதனால் பிரபலமாக இருக்கிறார் என்பதையும் அவர்களால் கூறமுடியவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை எனில், அவரை நீங்கள் தோற்கடிக்க முடியாது.", என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் அஜய் சேஹராவத் இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து," இறுதியாக, பா.ஜ.க வரும் பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு சக்தியாக இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் அங்கீகரித்துள்ளார். இதைத்தான், அமித் ஷா பல காலத்திற்கு முன்னரே கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.

"காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற முடியும்"

https://twitter.com/IamAjaySehrawat/status/1453619829202571264

இதற்கு முன்னர், மூத்த பத்திரிக்கையாளர் பர்கா தத்துடன் பிரசாந்த் கிஷோர் பேசியபோது, "பாரம்பரிய வழிகளில் காங்கிரஸை மறுமலர்ச்சி அடைய செய்ய முடியும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், காங்கிரஸ் அதற்கும் மேல் செல்ல வேண்டும். பீகார் மற்றும் பஞ்சாப் தவிர காங்கிரஸ் 2013 ஆம் ஆண்டிலிருந்து எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. இந்த இரண்டு இடங்களிலும்கூட போராடித்தான் வென்றது. புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு கட்சியின் காரணமாக காங்கிரஸ் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்துதான் காங்கிரஸின் நிலை மோசமடைந்து வருகிறது என்று நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை." என்று கூறியிருந்தார்.

இது 2018 ஆம் ஆண்டு வீடியோ. இதில் சில பகுதிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் யூ-டியூப் வலைத்தளத்தில் மீண்டும் பதிவேற்றப்பட்டு இருந்தது.

"மோதியின் தோல்வி நிச்சயம் செய்யப்பட்டு விட்டால், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி அடையலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், அவரை தோற்கடிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சி அடிமட்டத்தில் இருந்து மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது".

காங்கிரஸ் கட்சியுடன் விரிசல் அடைந்த உறவு

சில வாரங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார் என்ற செய்திகள் வெளிவந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏதேனும் பொறுப்பு அளிக்கப்படலாம் என்ற செய்தியும் வந்து கொண்டிருந்தது.

ஆனால், லகிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட கருத்தால், அவருக்கும் கட்சிக்கும் இடையிலான விரிசல் தொடங்கியது.

அக்டோபர் மாத தொடக்கத்தில், சமூக வலைதளங்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் மறுமலர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார். அவர், "லகிம்பூர் கேரி சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சி உடனடியாக மறுமலர்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பவர்கள் பெரும் ஏமாற்றமடைவார்கள்." என்று அவர் கூறியிருந்தார்.

"பழம்பெரும் கட்சியில் வேரூன்றியிருக்கும் ஆழமான சிக்கல்களுக்கும் அதன் வடிவத்தில் உள்ள பலவீனத்திற்கும் உடனடி தீர்வு இல்லை", என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

லகிம்பூர் கேரி சம்பவத்தில் அரசியல் லாப நஷ்டம் பார்ப்பது பாவச்செயல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இதற்கு பதில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு காங்கிரசுக்கும் அவருக்குமான உறவில் விரிசல் இருப்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

https://twitter.com/PrashantKishor/status/1446352603726565383

கோவா மீது ஆர்வம் காட்டும் திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ் கோவாவில் தன் காலடியை பதிக்க முயற்சி செய்து வருகிறது. கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக வியாழக்கிழமையன்று கோவா சென்றுள்ளார்.

பிரசாந்த் கிஷோர், இந்த கட்சிக்காக கோவாவில் அடித்தளம் போட்டு வருகிறார். அதன் காரணமாகவே, அவர் கோவாவில் உள்ளார்.

கோவாவில் முன்னாள் முதல்வர் லுயிஜின்ஹொ ஃபாலேரோவும் (Luizinho Faleiro) காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி தேர்தலில் வெற்றி பெற திட்டம் வகுத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர்.

https://twitter.com/AITCofficial/status/1451814101517176840

அதன்பிறகு, இந்த ஆண்டு மே மாதம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது, தான் தேர்தல் ஆலோசனை பணியை நிறுத்திக்கொண்டதாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் இந்த அறிவிப்புக்கு பிறகு, அவர் அரசியலில் குதிக்கலாம் என்றும் கருத்துகள் நிலவி வந்தன.

ஆனால், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை நிறுவனம் இணைந்து செயல்படும் என்று தெரிகிறது.

2014ஆம் ஆண்டு, பா.ஜ.கவின் வெற்றிக்கு பின், பிரஷாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக பிரபலமடைந்தார். பிகாரைச் சேர்ந்த அவர், நரேந்திர மோதி, பா.ஜ.க மற்றும் மம்தா பானர்ஜி தவிர்த்து, நிதிஷ் குமார், பஞ்சாப்பில் கேப்டன் அமரிந்தர் சிங், ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் ஆலோசகராக இருந்தார். தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அவர் தேர்தல் ஆலோசகராக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+