For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

25ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி வருகிறார் ஒபாமா.. இதுதான் "புரோகிராம்" லிஸ்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.

குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் நாளை மறுநாள் இந்தியா வருகிறார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் வருகிறார்கள்.

அவரது சுற்றுப்பயணம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

President Obama to Join PM Modi in 'Mann ki Baat' Radio Address

பாரம்பரிய முறைப்படி வரவேற்பு:

அதன்படி, ஏர்போர்ஸ்-1 விமானம் மூலம் ஒபாமா 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். பின்னர் அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மகாத்மாவிற்கு அஞ்சலி:

அதன்பிறகு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

பிரதமருடன் சந்திப்பு:

பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒபாமாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். முதலில் இரு தலைவர்களும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசுவார்கள். அதன்பிறகு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.

ஒபாமாவின் இரவு விருந்து:

பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இரவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை ஒபாமா சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு குடியரசுத்தலைவர் இரவு விருந்து அளிக்கிறார்.

குடியரசு தினவிழா:

26 ஆம் தேதி காலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அது முடிந்ததும் குடியரசுத்தலைவர் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிற்பகலில் பிரதமர் மோடியும், ஒபாமாவும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கு உரை:

27 ஆம் தேதி காலை பிரதமர் மோடியும், ஒபாமாவும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்கள்.

மனைவியுடன் தாஜ்மஹால் விஜயம்:

அதன்பிறகு ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் டெல்லியில் இருந்து ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார்.

அமெரிக்கா புறப்பாடு:

பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பும் அவர், அன்றே தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

சுற்றுப்பயண ஏற்பாடுகள்:

ஒபாமா இந்தியாவில் இருக்கும் போது, அவரது சுற்றுப்பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஷ் கோயல் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
US President Barack Obama will join Prime Minister Narendra Modi in a special edition of his monthly radio address 'Mann ki Baat' (from the heart) a day after the January 26 Republic Day celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X