ஜம்மு காஷ்மீரின் லடாக், லேவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
பதற்றம் நிலவும் லடாக் பகுதிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பயணம் மேற்கொள்கிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பதற்றம் நிலவும் ஜம்மு காஷ்மீரின் எல்லைகளான லடாக் மற்றும் லேவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
லடாக்கில் கடந்த வாரம் சீனா ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவினர். இதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சீனா ராணுவத்தினர் கல்வீசித் தாக்கினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் சரமாரியாக கற்களை வீசி விரட்டியடித்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லே மற்றும் லடாக் பகுதிகளுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார்.
லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். லே மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கும் அவர் செல்ல இருக்கிறார், இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications