வரிசையில் காத்திருந்து வாக்களித்த பிரதமர் மோடி!

சபர்மதி: குஜராத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
குஜராத் மாநில சட்டசபைக்கான மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 இடங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகின.

மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத், பதான் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மும்ரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபர்மதியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று வாக்களித்தார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
பிரதமர் மோடியை காண சபர்மதி வாக்குச்சாவடி பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள் பாரத் மாதாகி ஜெ என முழக்கமிட்டனர்.