ராகுல் வாயில் விஷத்தை ஊற்றணும்.. இருந்தால் சிவனின் அவதாரம்... குஜராத் அமைச்சர் விஷமப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ராகுல் காந்தி விஷம் குடித்து, உயிரோடு இருந்தால் அவரை சிவனின் அவதாரம் என்று நம்புகிறோம் என குஜராத் மாநில பாஜக அமைச்சர் கன்பத் வசவா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்களை அறிவித்து ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.

 ragul survives like Lord Shiva after consuming poison, we will believe : says Gujarat minister Ganpat Vasava

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாநில பாஜக அமைச்சர் கன்பாத் வசவா நேற்று சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசிய சில விஷயங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியை ஈர்க்க இதுதான் காரணம்.. வயநாடு தொகுதி, ஒரு பார்வை!

குறிப்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி குறித்து அமைச்சர் கன்பாத் பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் சிவன் மக்களை காப்பாற்ற விஷம் அருந்தினார். அதேமாதிரி காங்கிரஸார் ராகுல் காந்திக்கு 500 மில்லி லிட்டர் விஷம் கொடுக்க வேண்டும். அதை அருந்திய பின் ராகுல் காந்தி உயிரோடு இருந்தால், அப்போது நாங்கள் அவரை சிவனின் அவதாரம் என நம்புகிறோம்" என்றார்.

அமைச்சர் கன்பத் வசவாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ராகுல் காந்தி குறித்த அமைச்சரின் கருத்து துரதிஷ்டவசமானது என குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி வேதனை தெரிவித்தார். மேலும் இப்படிப்பட்ட பேச்சுக்களை பேசும் குணம் கொண்டவர்கள் தான் பாஜகவினர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+