புதுச்சேரி, தமிழக மக்களிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி: எதற்கு தெரியுமா?
டெல்லி: ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காய்ச்சலாக இருப்பதால் தான் புதுச்சேரி பிரச்சார பயணத்தை ரத்து செய்ததாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மே 10, 11 ஆகிய தேதிகளில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இந்நிலையில் மேடையில் பேசுகையில் ராகுலை குண்டு வைத்து கொலை செய்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு மர்ம கடிதம் வந்தது.
இதையடுத்து ராகுல் காந்தியின் புதுச்சேரி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

ராகுல்
வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் தான் ராகுல் காந்தியின் புதுச்சேரி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி தனது பயணம் ரத்தானதற்கான காரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
காய்ச்சல்
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து எனக்கு காய்ச்சலாக உள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு(அதாவது 10,11ம் தேதி) ஓய்வு எடுக்குமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளார் என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.
|
மன்னித்துவிடுங்கள்
10 மற்றும் 11ம் தேதி திட்டமிட்டபடி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று ராகுல் ட்வீட்டியுள்ளார்.
|
பிரச்சாரம்
மறுபடியும் பிரச்சார பயணம் மேற்கொள்வது குறித்து விரைவில் அனைவருக்கும் அறிவிப்பேன் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications