குஜராத் பிரசாரத்தின் நடுவே ரோட்டு கடையில் ஜிலேபி, பஜ்ஜி சாப்பிட்ட ராகுல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது சற்று ரிலாக்ஸ் செய்யும் விதத்தில் சந்தரல்லா கிராமத்தில் உள்ள ரோட்டு கடையில் அமர்ந்து ஜிலேபி மற்றும் பஜ்ஜியை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சுவைத்தார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் டிசம்பர் 9-ஆம் தேதியும், 18-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றை தணிக்க தற்போது தொழிற்சாலைகள் நிறைந்த குஜராத் மாநிலத்தை குறிவைத்து மத்திய அரசு ஜிஎஸ்டி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Rahul gandhi eats jalebi at road side eatery in Gujarat

பணமதிப்பிழப்பு, வங்கி வாசலில் உயிரிழந்தோர், ஏடிஎம் மையமே கதி என கிடந்தோர், கருப்புப் பணத்தை மீட்காதது என மத்திய அரசின் வீக்னெஸ்களை மக்களிடம் முன்வைத்து அதை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் பாடுபடுகிறது.

உத்தரப்பிரதேச தேர்தலை போன்று கோட்டை விடாமல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று ராகுல் காந்தி கடந்த சில நாள்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

சந்திரல்லா கிராமத்தில் பிரசாரத்தின்போது சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது காலை உணவை அங்கிருந்த ரோட்டோர கடையில் சென்று சாப்பிட்டார். அவர் ஜிலேபி, பஜ்ஜி, ஃபாப்டா (கடலை மாவை கொண்டு பொறிக்கப்படும் ஒரு ஸ்நாக்ஸ்) ஆகியவற்றை சுவைத்தார்.

அப்போது அங்கு அவரிடம் குறைகளை கூறிய ஒரு நபருக்கும் பஜ்ஜியை கொடுத்து விட்டு அவரது குறைகளை கேட்டறிந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In between Gujarat Assembly election campaign, Congress vice president Rahul Gandhi eats bajji and jalebi at a road sode eatery in Chandralla Village.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற