பிரதமர் வேட்பாளர்.. காங். தலைகளை சாந்தப்படுத்திய ராகுல்
டெல்லி: டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் இன்று ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை அமைதிப்படுத்திய ராகுல் காந்தி, நான் மாலையில் பேசுகிறேன். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அமைதிப்படுத்தினார்.
டெல்லியில் இன்று காலை நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், சோனியா காந்தி உரை நிகழ்த்தினார். அப்போது ராகுல் காந்தி குறித்து எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது என்று அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள், சோனியா காந்தி பேசி முடித்த பிறகு, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி வேகமாக எழுந்து வந்து மைக்கைப் பிடித்தார். எழுந்து நின்று தனக்கு ஆதரவாக கோஷம் போட்டவர்களைப் பார்த்து, அமைதியாக உட்காருங்கள் என்று அமரச் செய்தார். பின்னர், உங்களது கருத்துக்களுக்கு, கோரிக்கைககளுக்கு நான் மாலை 3.30 மணிக்குப் பேசும்போது பதில் சொல்கிறேன். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கூட்டத்தில் அமைதி திரும்பியது. ராகுல் காந்தி இன்று மாலை பேசும்போது, காங்கிரஸாருக்கு உற்சாகம் தரும் வகையில் ஏதாவது இன்ப அதிர்ச்சி தருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications