போராடும் தமிழக மக்களை மோடி அவமதித்து விட்டாரே... பொங்கும் ராகுல் காந்தி!
தமிழக மக்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
போராடி வரும் விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பச்சை துண்டு போட்டு..
விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல்காந்தி விவசாயிகளைப் போன்றே பச்சை நிறத் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு அவர்களது அருகில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உடன் இருந்தார்.

தமிழர்கள் அவமதிப்பு
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழக மக்களை மோடி அவமதித்துவிட்டார் என்று கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழர்கள் இந்தியாவின் மக்கள் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மோடியின் மோகம்
தமிழக மக்களையும் மோடி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே மோடி சலுகை காட்டி வருகிறார் என்றும் கடுமையாக சாடினார். அதனால்தான் விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.

மறுப்பது ஏன்?
பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்துள்ளது. அப்படி இருக்க விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன் என்பது மட்டும் புரியவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications