ராகுல்காந்திதான் எனக்கும் தலைவர்.. காங். எம்.பி.க்கள் மத்தியில் சோனியா காந்தி பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் எனக்கும் தலைவர் தான், கட்சியில் அவரை மீறி நான் நடக்க மாட்டேன், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியில் சோனியாகாந்தி பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Rahul is the leader for me too says Sonia Gandhi

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் எனக்கும் தலைவர் தான். கட்சியில் அவரை மீறி நானும் செயல்பட மாட்டேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார். மேலும் ராகுல் வகுக்கும் வழியில் அவருடன் இணைந்து பா.ஜ.க வை தேர்தலில் நாம் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

குஜராத் தேர்தலில் கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டோம் என்று சுட்டிக்காட்டிய சோனியா காந்தி சமீபத்திய ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் நம்முடைய வெற்றியை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். காற்று திசைமாறி வருகிறது, கர்நாடக தேர்தலிலும் காங்கிரஸ் எழுச்சி பெறும் என்ற உறுதியாக நம்புவதாகவும் சோனியாகாந்தி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul is the leader for me too says Sonia Gandhi. While addressing the Congress MPs meeting she added that according to the party rahuls decision is final

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற