பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு!!
மொஹாலி: விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் சண்டிகர் - அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் இன்று பெரிய அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால் அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது.
இன்று வரை போராட்டம் நடக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி ஏற்கனவே இன்று வரை அந்த மாநிலத்தில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. மேலும் ரயில்கள் ரத்து செய்யப்படுமா என்பது இன்று தெரிய வரும்.

சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையை மறைத்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஹன்தேஸ்ரா என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இருக்கும் பஸ் நிறுத்தங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இக்கட்சியின் தலைவர் நரிந்தர் சிங் ஷெர்கில் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காசர் ஜூராளி சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யூத் பஞ்சாப் அமைப்பினர், பரம்ஜித் சிங் பைத்வான் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொஹாலியில் இருக்கும் சிங் ஹஹீத் குருத்வாரா ஏர்போர்ட் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர்.

மொஹாலி நகரில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் மட்டும் இன்று திறந்து இருக்கும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்து இருந்தன. இதன்படி பல்வேறு மண்டிகளை விவசாயிகள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை போராட்டம் நீடிக்கப்பட்டு இருப்பதால், நாளை பெண்கள் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி பகத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நாளில் போராட்டத்தில் இளைஞர் அமைப்பினர் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
''எங்களது விவசாயிகள் போராட்டத்தில் எந்த அரசியல் தலைவர்களையும் பேச அனுமதிக்க மாட்டோம். விவசாய மசோதா வாபஸ் பெறும் வரை எங்களது ஆர்ப்பாட்டம் தொடரும்'' என்று கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் அமைப்பின் பஞ்சாப் மாநில செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications