மோடி பதவியேற்பு விழா: ராஜபக்சே உள்ளிட்ட "சார்க்" தலைவர்களுக்கு அழைப்பு!
டெல்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடியை நியமித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மே 26-ந் தேதியன்று பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சார்க் அமைப்பில் ஆப்கான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளன.
இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான பணிகளை வெளியுறவுத் துறை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமனோ, அண்டை நாடுகளின் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதற்காகவே சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications