ராஜஸ்தான்.. ஆட்சியை கலைக்க பாஜக முயல்கிறது.. காங். முதல்வர் அசோக் புகார்.. 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி ராஜஸ்தானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கொஹ்லெட் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க நடந்த மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி அங்கு கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தார். அதேபோல் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தது.

அதாவது துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கோஹ்லெட் இடையே மோதல் இருப்பதாகவும், சச்சின் பைலட் ஆட்சியை கவிழ்க்க போகிறார் என்றும் நிறைய செய்திகள், புகார்கள் வந்தது.

என்ன புகார்

என்ன புகார்

அதோடு சச்சின் பைலட் கட்சியை விட்டு 20 எம்எல்ஏக்களுடன் வெளியேற இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தது . ஆனால் இதை காங்கிரஸ் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி ராஜஸ்தானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கொஹ்லெட் கருத்து தெரிவித்துள்ளார்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

அதில், ராஜஸ்தான் ஆட்சியை கவிழ்க்க முயன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பரத் மலானி, அஸோக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் எம்எல்எங்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். அதேபோல் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்.

விசாரணை செய்கிறோம்

விசாரணை செய்கிறோம்

இவர்களை விசாரணை செய்து வருகிறோம். ராஜ்யசபா தேர்தலுக்கு முன்பாக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து கட்சி மாற அழைத்து உள்ளனர். அதன்பின்பாக ஆட்சியை கவிழ்க்க 20 எம்எல்ஏக்களுடன் இவர்கள் பேசி உள்ளனர் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சச்சின் பைலட் மற்றும் அசோக் கோஹ்ல்ட் இடையே பிரச்சனை ஏற்படுத்த முயன்றனர் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை ஏற்படுத்த முயற்சி

பிரச்சனை ஏற்படுத்த முயற்சி

இவர்கள் இருவரின் போன் கால் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக முதல்வர் அசோக் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பாக 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒன்றாக புகார் அளித்ததும், பாஜக எங்களை வளைக்க பார்க்கிறது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+