• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்லாதானே பேசினார்கள், இப்போ ஏன் எதிரியானார்கள்.. மோடி உண்மை பேசவேண்டும்.. ராஜஸ்தான் முதல்வர் சுளீர்

|

ஜெய்ப்பூர்: "மோடி பதவி ஏற்றபிறகு, அண்டை நாடுகளின் தலைவர்கள் எல்லாம் நம்ம நாட்டுக்கு வந்து போயி இருந்தார்கள்... ஆனால், இப்போ திடீர்னு அண்டை நாடுகளுடன் நம் நட்புறவு ஏன் மோசமடைந்துள்ளது? ஏன் அவர்கள் எல்லாம் நமக்கு எதிராக திரும்பி உள்ளனர்? சீனாவுடன் என்ன நடந்தது என்பது நமக்கு இன்னும் புதிராகவே இருக்கு.. என்னதான் நடந்தது? இன்னைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்காவது இதை பற்றி பிரதமர் உண்மையை சொல்ல வேண்டும்" என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் மோடிக்கு கிடுக்கிப்பிடி கேள்வியை வீடியோ பதிவிட்டு எழுப்பி உள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.. தற்போது, இந்த கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.. இதனை இந்தியா மறுத்து வருகிறது.

இதனிடையே, நம்முடைய எல்லை பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், ஆனால், அதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி அன்றைய தினம் முதல் இப்போது வரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

 "சூப்பர் கேரியர்".. இந்தியாவிற்காக அமெரிக்கா களமிறக்கிய ராட்சச போர் கப்பல்.. சீனாவிற்கு அதிரடி செக்!

 தேசிய கட்சிகள்

தேசிய கட்சிகள்

"இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை" என்று பிரதமர் விளக்கம் தந்த நிலையிலும், அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை.. இரண்டு தேசிய கட்சிகளுமே மாறி மாறி இந்த எல்லை விவகாரம் தொடர்பாக விடாமல் கருத்துக்களையும், ட்வீட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

 அசோக் கெலாட்

அசோக் கெலாட்

அந்த வகையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொன்னதாவது: ''கிழக்கு லடாக் எல்லை பிரச்சினையில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே என்னதான் நடந்தது? ஏன் நம்முடைய 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்? என்பது குறித்து எந்தவிதமான தெளிவான அறிக்கையும் இதுவரை இல்லை... இந்த பிரச்சினையில் உள்ள குழப்பத்தை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

 மோடி

மோடி

2014-ம் ஆண்டின் மத்தியில், அதாவது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அண்டை நாடுகளுடன் நாம் வைத்திருந்த உறவு மிகவும் மோசமடைந்துவிட்டது. இதுக்கெல்லாம் காரணம் என்ன? மோடி பதவி ஏற்றபின், அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.. அந்த நாட்டு தலைவர்களும் இங்கே வந்தார்கள்.. ஆனால் இப்போ திடீர்னு அண்டை நாடுகளுடனான இலங்கை, நேபாளம், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நாம் வைத்திருந்த நட்புறவு ஏன் மோசமடைந்துள்ளது?

 புதிராக உள்ளது

புதிராக உள்ளது

நமக்கு எதிராக அந்த நாடுகள் எல்லாம் திரும்ப என்ன காரணம்? இதில், சீனாவுடன் என்ன நடந்தது என்பது நமக்கு இன்னும் புதிராகவே இருக்கு. முதலில், மக்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையை ஊட்ட வேண்டும்... ஆனால், மத்திய அரசு மக்கள் முன் வைத்த உண்மைகள் எல்லாவற்றையும் சீனா வரவேற்றது துரதிர்ஷ்டமான ஒன்றாகும்.. அப்படியென்றால் நம் வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தது பற்றி பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

  India-China Border பிரச்சினை பற்றி பேசாத Rajnath Singh | Rajnath Singh Russia Visit
  உண்மை

  உண்மை

  ஆனால், இதுவரை எந்தவிதமான விளக்கமும் இல்லை... தற்போது நாட்டில் சீனாவுக்கு எதிரான ஒரு மனநிலைதான் நிலவுகிறது.. மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.. இன்னைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்காவது பிரதமர் உண்மையை சொல்வார்..இப்படி மறைப்பது எதற்குமே உதவாது... இருந்தாலும் அரசு மறைக்கவே முயன்று கொண்டிருக்கிறது.. 1962-ல் சீன போருக்கு பிறகு பின் இந்தியா இன்று சூப்பர் பவர் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது" என்றார்.

  சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது. பிரதமர் இந்த விவகாரத்தில் விரிவான விளக்கம் அளிப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

  English summary
  rajasthan cm ashok gehlot has criticized pm modi over india china clash issue
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X