ராஜஸ்தான்:காங்.-ல் கலகக் குரல் எழுப்பிய சச்சின் பைலட்- ஆம் ஆத்மியில் இணைகிறாரா? தனிக்கட்சி தொடக்கமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் மிகவும் உக்கிரமாக கலகக் குரல் எழுப்பியுள்ள சச்சின் பைலட் தற்போது டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து ராஜஸ்தான் நிலவரம் குறித்து பைலட் ஆலோசனை நடத்தினாலும் அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பெரும் விவாதத்துகுரியதாக உருவெடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே உறையில் இரு கத்திகள் என்பது போல சீனியரான முதல்வர் அசோக் கெலாட்; மற்றொரு இளம் தலைவர் சச்சின் பைலட். இத்தனைக்கும் அசோக் கெலாட் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தவர் சச்சின் பைலட். ஆனாலும் முதல்வர் பதவி மீதான குறியில் சச்சின் பைலட் அவ்வப்போது அவதாரம் எடுப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த முறை முந்தைய பாஜக ஆட்சி மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஜெய்ப்பூரில் நடத்தினார் சச்சின் பைலட். இது அசோக் கெலாட்டுக்கு எதிரான யுத்தம் அல்லது பாஜகவுக்கு எதிரான போராட்டம் என்பது மட்டுமல்ல. இந்த போராட்டத்தின் மூலம் தமது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டார் சச்சின் பைலட் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அவர் பாஜகவுக்கு படைபரிவாரங்களோடு தாவக் கூடும் என்கிற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்போதைக்கு சச்சின் பைலட் முன் உள்ள 2 வாய்ப்புகள் ஒன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைவது; 2-வது தனிக் கட்சி தொடங்குவது.
காங்கிரஸில் இருந்து பிரிந்து போய் தனிக்கட்சி தொடங்கி போனியானவர்களில் சரத்பவாரைத் தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. அண்மையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருந்த இடம் தெரியாமல் போனார். ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஆவர்த்தனம் எத்தனை நாளைக்கு என தெரியாது என்கிற நிலைமைதான்.
வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் இடத்தை மெல்ல மெல்ல ஆம் ஆத்மி கைப்பற்றி வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக பஞ்சாப் மாநில நிலவரத்தை சொல்லலாம். பஞ்சாப்பில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியையே கைப்பற்றி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நம்புகிற சச்சின் பைலட், ஆம் ஆத்மி ஜோதியில் இணைந்து ராஜஸ்தானில் சாதிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications