சமையல் எண்ணெய்யை.. கொதிக்க கொதிக்க கணவர் மீது ஊற்றிவிட்டு.. சைலண்டாக பார்த்த மனைவி.. உதறல் எடுக்குதே
ஜெய்ப்பூர்: மத்திய பிரதேச மாநில ஹனிமூன் கொலை, ஜார்க்கண்ட் மாநில பூச்சி மருந்து கொலை, சாப்பாட்டில் விஷம், என தங்களது கள்ளக்காதலனுக்காக, தாலி கட்டிய கணவனை கொலை செய்ய பெண்கள் துணிந்து வருகிறார்கள்.. இந்த சம்பவங்களை நினைத்து, பொதுமக்களும் கலங்கி போயிருக்கிறார்கள்.. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் 42 வயது ஹரிஸ் சந்திரா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி கரீஷ்மாவுக்கு 36 வயதாகிறது.. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கரீஷ்மா - தகாத உறவு
இதில் கரீஷ்மாவுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டதால், அவரை கொலை செய்ய, சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார்..
இது தெரிந்த கணவர், அந்த சாப்பாட்டை சாப்பிடாமல், ஊர் பஞ்சாயத்தை கூட்டி, அந்த கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்துவிட்டார்.. நேற்றுமுன்தினம் நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில், இன்னொரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் கணவர்
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள பன்மனிவாடி என்ற பகுதியில் வசித்து வருகிறார் மணிஷ் ரத்தோட்.. இவரது மனைவி பெயர் சரோஜ்.. திருமணமாகி ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடிக்க துவங்கின.
இதனால், கடந்த சில நாட்களாகவே கணவன் - மனைவிக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. .. இந்த நிலையில் சம்பவத்தன்று, மணிஷ், இரவில் வீட்டில் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது அவரது மனைவி சரோஜ், திடீரென கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிவிட்டார்.. அத்துடன், அவரை அறைக்குள் வைத்து வெளிப்பக்கமாகவும் பூட்டி விட்டார்.
அலறிய கணவர்
கொதிக்கும் எண்ணெய் உடம்பில் கொட்டப்பட்டதால், மணிஷ் வலி பொறுக்க முடியாமல் அலறி கத்தினார்.. ஆனாலும், சத்தமின்றி வெளியே அமைதியாக நின்று கொண்டிருந்தார் மனைவி சரோஜ்.. கதவையும் திறக்கவில்லை..
மணிஷின் அலறல் சத்தத்தை கேட்டு, வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளும் பயத்தில் அலறி கதறினர்..பிறகு, மெதுவாக கதவை திறந்துவிட்டார் சரோஜ்.. இதையடுத்து, மணிஷின் சகோதரர், அறைக்குள் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிஷை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார்.. அங்கு மணிஷுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
விசாரணை - அட்வைஸ்
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான், சரோஜுக்கும் மற்றொரு நபருக்கும், தகாத உறவு இருந்து வந்தது அம்பலமானது.. இந்த உறவை துண்டித்துவிடும்படி, மணிஷ், மனைவியிடம் அறிவுறுத்தினாராம். ஆனால், சரோஜ் தொடர்ந்து தன்னுடைய தகாத உறவை நீட்டித்து வந்தார்..
இதனால், நாளுக்கு நாள் கணவரின் அட்வைஸ் அதிகமாகிவிட்டதாலும், குடும்பத்தில் தகராறு வெடித்ததாலும், இருவருமே விவாகரத்து பெற முடிவு செய்தனர்..
பதற வைத்த வாக்குமூலம்
இப்படிப்பட்ட சூழலில்தான், யூடியூபில் வீடியோ ஒன்றை பார்த்தாராம் மனைவி சரோஜ் .. அந்த வீடியோவை பார்த்த பிறகுதான், கணவரை கொலை செய்ய முடிவு செய்தாராம்.. இதற்காக ஒவ்வொரு முறையும் முயற்சி மேற்கொண்டபோது, அதிலிருந்து மணிஷ் தப்பியவாறே இருந்துள்ளார்..
முக்கியமாக, தன்னுடைய குழந்தைகளுடனேயே அதிக நேரம் பொழுதை கழித்து கொண்டிருப்பாராம் மணிஷ்.. மேலும், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்ததால், எந்தவிதமான கொலை முயற்சியையும் சரோஜ்ஜால் மேற்கொள்ள முடியவில்லையாம்.. இதனால் பலமுறை உயிர் தப்பியுள்ளதாக தெரிகிறது.. இறுதியாக, கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தாராம்..
இப்போது சரோஜ் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. அவருடன் உறவில் இருந்த ஆண் நண்பர் யார் என்றும் தெரியவில்லை. அதையும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். யூடியூப் வீடியோவை பார்த்து, கணவரை கொல்ல முயன்ற இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications