பீகார் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ராம்நாத் கோவிந்த்… பிரணாப் முகர்ஜி ஏற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் ஆளுநர் பதவியை ராம்நாத் கோவிந்த் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அவர் சமர்ப்பித்துள்ளார். இதனை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Ram Nath Kovind resigns his post

ராம்நாத் கோவிந்துக்குப் பதிலாக, மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பீகார் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த், தலித் மக்களின் தலைவராக பாஜக தலைமையால் அறிமுகம் செய்யப்பட்டவர். இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற, பாஜக திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள், ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் மட்டும் அமைதியாகிட மாட்டோம் என்றும் அவர் பாஜகவின் வளர்ப்பு என்பதை எப்போதும் மறக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Presidential election candidate Bihar Ram Nath Kovind has resigned his Bihar Governor post.
Please Wait while comments are loading...