தனி அறை, கைதி எண் 1997, சீருடை, அழுகை: ராம் ரஹீமின் சிறை வாழ்க்கை
ரோதக்: சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு கைதி எண் 1997 அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
ரோதக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீமுக்கு கைதி எண் 1997 அளிக்கப்பட்டுள்ளது.

உடை
வழக்கமாக ஜிகு ஜிகு என்று உடை அணியும் அவருக்கு பிற கைதிகள் அணியும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. சாமியாருக்கு எந்தவித சிறப்பு சலுகையும் அளிக்கவே கூடாது என்று நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தனி அறை
சிறையில் ராம் ரஹீம் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவர் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளாராம். அவரை பாதுகாக்கும் பணியில் 2 மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

உணவு
வெள்ளிக்கிழமையில் இருந்து ராம் ரஹீம் உணவு சாப்பிடாமல் பாலும், நீரும் மட்டுமே குடித்தாராம். மேலும் யாருடனும் பேசாமல் இருந்தார் என்று அந்த சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள நபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video


அப்பாவி
நீதிபதி தீர்ப்பை வாசிக்கும்போது ராம் ரஹீம் அழுதுள்ளார். தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை வேண்டும் என்றே இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications