ஜனாதிபதி தேர்தல்: அதிமுகவின் வாக்குகளை மொத்தமாக அள்ளிய ராம்நாத் கோவிந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக நினைத்தபடியே அதிமுகவின் அத்தனை கோஷ்டி வாக்குகளையும் மொத்தமாக அள்ளியிருக்கிறது.

2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தாம் முன்னிறுத்த வேட்பாளர் சங்மாவை ஆதரிக்கும் நிலைக்கு பாஜகவை வழிக்கு கொண்டுவந்தவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் இன்று ஒட்டுமொத்த அதிமுகவுமே பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாக சரணாகதி அடைந்திருப்பது காலத்தின் கோலம்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் என அறிவிப்பு வெளியான அதேநேரத்தில் எங்கள் ஆதரவு உங்களுக்கு.. எங்கள் ஆதரவு உங்களுக்கு என அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் அறிவித்தன. அந்தளவுக்கு ஐடி ரெய்டு உள்ளிட்டவைகளால் அலறிப் போய் கிடக்கிறது அதிமுக.

ராம்நாத் வெற்றி

ராம்நாத் வெற்றி

இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாஜகவின் ராம்நாத் கோவிந்த் 66% வாக்குகளைப் பெற்று நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழகத்தில் ராம்நாத் கோவிந்துக்கு 23,584 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது அதிமுகவின் 134 எம்.எல்.ஏ.க்களும் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்துக்கு 23,584 வாக்குகள்

ராம்நாத் கோவிந்துக்கு 23,584 வாக்குகள்

தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கான வாக்கு மதிப்பு என்பது 176. மொத்தம் 40832 வாக்குகள். இதில் ராம்நாத் கோவிந்த் 23,584 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

மீராகுமாருக்கு 17, 248 வாக்குகள்

மீராகுமாருக்கு 17, 248 வாக்குகள்

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு தமிழகத்தில் 98 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதாவது மொத்தம் 17, 248 வாக்குகளை தமிழகத்தில் மீராகுமார் பெற்றிருக்கிறார்.

232 பேர் வாக்களித்தனர்

232 பேர் வாக்களித்தனர்

தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 234. ஜெயலலிதா மறைவால் ஆர்கே நகர் தொகுதி காலியாக இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை. மொத்தம் 232 பேர் வாக்களித்தனர்.

ராம்நாத்துக்கு அதிமுக ஆதரவு

ராம்நாத்துக்கு அதிமுக ஆதரவு

சட்டசபையில் அதிமுக அணியின் பலம் 136 ஆக இருந்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக அணியில் மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள். இவர்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரைத்தான் ஆதரிப்பேன் என அறிவித்திருந்தார். எஞ்சிய 134 வாக்குகளும் அப்படியே பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு கிடைத்திருக்கிறது.

India's new President Ram Nath Kovind-Oneindia Tamil
மீராகுமாருக்கு திமுக

மீராகுமாருக்கு திமுக

அதேபோல் திமுக- காங்கிரஸ்- முஸ்லிம் லீக் இணைந்து 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கருணாநிதி வாக்களிக்காத நிலையிலும் தமிமுன் அன்சாரி ஆதரவாக வாக்களித்ததால் மொத்தம் 98 எம்.எல்.ஏக்கள் வாக்குகள் மீராகுமாருக்கு கிடைத்திருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP's Presidential Candidate Ramnath Kovind got 134 ADMK Votes; Congress Candidate Meira Kumar got 98 DMK alliance votes.
Please Wait while comments are loading...