இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்.. செங்கோட்டையில் மோடி உரை!
நாட்டின் 71வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நான்காவது முறையாக உரையாற்றவுள்ளார்.
டெல்லி: நாட்டின் 71வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
கொடியேற்றிய பிறகு நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றுவார். அதில் நாட்டின் நலனுக்கான பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் டோக்லாம் விவகாரங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அதுகுறித்த அறிவிப்புகளும் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகளும் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செங்கோட்டையின் லஹோரி நுழைவு வாயில் பகுதியில் வரும் பிரதமர் மோடியை பாதுபாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே, பாதுகாப்புத்துறை செயலர் சஞ்சய் மித்ரா ஆகியோர் வரவேற்பார்கள்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை செயலர் டெல்லி லெப்டினன்ஙட் ஜென்ரல் மேனோஜ் முகுந்தை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அவர்களின் வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார்.
முப்படைகளில் இருந்தும் தலா 24 வீரர்கள் அணிவகுப்புடன் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றுவார். இந்த ஆண்டு ராணுவ வகுப்பு மரியாதையை லெப்டினன்ட் கர்னல் தீர்ஜ் வழிநடத்தி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை அணிவகுப்பை லெப்டினன்ட் விவி கிருஷ்ணனும் விமானப்படை அணுவகுப்பை லெப்டினன்ட் சலில் ஷர்மாவும் முன்னெடுத்து செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications