அது அவங்க பிரச்சனை.. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா அதிரடி நிலைப்பாடு.. பாக்.கிற்கு மேலும் சிக்கல்
காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு, இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யு
நியூயார்க்: காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு, இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
70 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது அமெரிக்க அரசும் கருத்து தெரிவித்துள்ளது.

என்ன சொன்னார்
இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பாக அதன் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மார்கன் ஓர்டாகஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு . இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான்.

எங்கள் முடிவை
அவர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அங்கு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதும், இரண்டாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டதும் தெரியும். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வெள்ளை மாளிகை
அங்கு நடக்கும் விஷயங்களை வெள்ளை மாளிகை கவனித்து வருகிறது. காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அங்கு இருப்பவர்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தாலே போதும் என்று மார்கன் ஓர்டாகஸ் பேட்டி அளித்துள்ளார்.

உள்நாட்டு விவகாரம்
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இருப்பதால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இதனால் மீண்டும் இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்கான அறிகுறியும் தோன்றியுள்ளது.
-
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications