காவிரி வழக்கு.. கர்நாடக வக்கீல் ஃபீஸ் செலவு ரூ.76 கோடி.. நாரிமனை மாற்ற கோரி பாஜக தலைவர் ஆக்ரோஷம்
பெங்களூர்: காவிரி பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, கர்நாடக சட்டசபையின் இரு அவைகளின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலவை எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் ஈஸ்வரப்பா பேசுகையில், நாரிமனால் கர்நாடகாவுக்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து நடங்கள் என்று சொல்வதற்கு நமக்கு ஒரு வழக்கறிஞர் தேவையா. கர்நாடகாவிலே, மிகவும் அனுபவம் வாய்ந்த பல வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களை வாதாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்திற்காக வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு ரூ.76 கோடியை செலவிட்டுள்ளது. அப்படியிருந்தும், கர்நாடகாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. எனவே நாரிமனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.
நாரிமனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக பாஜகவினரால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுதான், அவரை நீடிக்க செய்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற, காவிரி விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீர் திறக்காத கர்நாடகாவுக்கு ஆதரவாக தான் வாதிடப்போவதில்லை என பாதியிலேயே நாரிமன் உட்கார்ந்துவிட்டார். இது அவர் மீது கர்நாடக மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.
எனவே தமிழகத்திற்கு ஏதோ கொஞ்சம் தண்ணீரை திறந்துவிட்டு நாரிமனையும், சுப்ரீம் கோர்ட்டையும் மகிழ்விப்பதா அல்லது, நாரிமனுக்கு பதில் கபில் சிபலை வாதிட செய்வதா என கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications