For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் நாளை நடக்கும் ராணுவ கருத்தரங்கு.. ரஷ்ய ஹெலிகாப்டர்கள் குறித்து முக்கிய முடிவு!

ரஷ்யா இந்தியாவிடம் விற்று இருக்கும் ராணுவ ஹெலிகாப்டர்களை பராமரிப்பது குறித்து சென்னையில் நடக்க இருக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் முக்கியமான முடிவுகள் எட

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் நிர்மலா சீதாராமன்- வீடியோ

    டெல்லி: ரஷ்யா இந்தியாவிடம் விற்று இருக்கும் ராணுவ ஹெலிகாப்டர்களை பராமரிப்பது குறித்து சென்னையில் நடக்க இருக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    ரஷ்யாவிடம் வாங்கப்பட்டு இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறைய இருக்கிறது. எம்ஐ- 8/17, எம்ஐ 26, எம்ஐ25, கேஏ 25, கேஏ 28, கேஏ 31 ஆகிய ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இந்தியாவின் விமான படையை அலங்கரிக்கும் பெரும்பாலான விமானங்கள் ரஷ்ய விமானங்கள்தான்.

    Russian Helicopters will do negotiations at Defexpo on the maintenance of its helicopters

    கேஏ 226டி போன்ற ஹெலிகாப்டர்கள் ரஷ்யா மற்றும் இந்திய கூட்டு முயற்சியில் தாயாரிக்கப்படுகிறது. எம்ஐ 171ஏ2 போன்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட ஹெலிகாப்டர்கள் இந்த கருத்தரங்கில் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான கையெழுத்துகள் கடந்த 2017லிலேயே இடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் தற்போது இதன் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன்படி ரஷ்யா இந்தியாவிற்கு அளிக்கும் விமானங்களில் பராமரிப்பை அந்நாட்டு விஞ்ஞானிகளே செய்ய போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணம் எவ்வளவு என்று விவாதிக்கப்பட்டது ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

    இப்போது வாங்கும் ஹெலிகாப்டர்கள் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு வாங்கிய ஹெலிகாப்டர்களை ரஷ்யாவே பராமரிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது. நாளை காலை இந்த கருத்தரங்கு தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும். சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவில் அருகே இந்த விழா நடக்க உள்ளது.

    English summary
    Russian Helicopters will do negotiations at Defexpo on the maintenance of its helicopters. This expo will start on April 11.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X