சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. புல்மேடு பாதையில் சன்னிதானம் செல்லும் ஐயப்ப பக்தர்கள்!
இடுக்கி: சபரிமலை பம்பை பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வண்டி பெரியார்- புல்மேடு பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் காலம்தான் அதி உச்ச சீசன். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு நாளும் சுமார் 80,000 முதல் 90,000 வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை வந்து அங்கு பம்பை ஆற்றில் புனித நீராடி 5 கிலோ மீட்டர் மலையில் அப்பச்சிமேடு, நீலிமலை, சரங்குத்தி வழியே சன்னிதானத்தை சென்றடைவர். தற்போது கீழ் பகுதியான பம்பையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து மலைக்கு யாத்திரையாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதேபோல பெருவழிப்பாதை எனப்படும் எருமேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து 3-வது பாதையான வண்டி பெரியார்- புல்மேடு வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை சென்றடையும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 5,000க்கும் அதிகமான பக்தர்கள் புல்மேடு வழியாக சன்னிதானத்தை அடைகின்றனர். புல்மேடு பகுதியில் மலை இறக்கம் என்பதால் பக்தர்கள் அதிகமாக இந்த பாதையையும் பயன்படுத்துகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து புல்மேடு வழியாக பக்தர்கள் திரும்பும் போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து புல்மேடு பாதையை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
#WATCH | Kerala: A large number of devotees visited and offered prayers at Sabarimala Sree Dharma Sastha Temple, in Pathanamthitta. pic.twitter.com/rLtJD2m3qm
— ANI (@ANI) December 17, 2023
தற்போது புல்மேடு பகுதியை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதால் அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் சென்ற கேரளா பக்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். அதேபோல புல்மேடு பாதையில் பயணித்த போது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற 32 வயது இளைஞரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால் புல்மேடு பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கும் முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications