ஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது
சபரிமலை கோயில் நடை இன்று இரவு மூடப்படுகிறது.
Recommended Video

சபரிமலை: கோர்ட் தீர்ப்பு வந்து இதுநாள்வரை ஒருநாள் கூட பெண்கள் கோயிலுக்குள் காலடி வைக்காத நிலையில் சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது.
சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அதிலும் கடந்த சில வாரங்களாகவே, இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பதற்றம் நிறைந்த சூழலே காணப்பட்டு வருகிறது.

உச்சக்கட்ட பரபரப்பு
அதிலும் கடந்த வாரத்திலிருந்து இப்போது வரை உச்சக்கட்ட பரபரப்பே நீடிக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தே தீருவது என 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் படை கிளம்ப, அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த.. பதற்றம் மேலும் தொத்திக் கொண்டது.

8 பெண்கள் முயன்றார்கள்
அனைத்து தடைகளையும் மீறி சபரிமலைக்கு இதுவரை 8 பெண்கள் நுழைய முற்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் யாரும் கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

நடை மூடப்படுகிறது
இதனால் பெண்கள் மாறுவேடத்தில்கூட யாரும் கோயிலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் கோயில் நிர்வாகம் உறுதியாக உள்ளதால் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி மாலை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது, பரபரப்பான மிகவும் பதற்றமான சூழலில் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழையவே இல்லை
இன்று இரவு 10 மணிக்கு நடை மூடப்படும் என்றும் மீண்டும் அடுத்த மாதம் மண்டல பூஜைக்காகத்தான் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடை திறக்கப்பட்டு 5 நாள் ஆனாலும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் நுழையவே முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications