For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளையாட்டில் ”சதம்” அடித்த சச்சின்…எம்.பி பதவியில் டக் அடித்தார்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா எம்.பி.யாக சச்சின் பதவியேற்று இரண்டுஆண்டுகள்ஆகிவிட்ட நிலையில் இதுவரை சபையில் அவர் ஒரு கேள்வி கூட கேட்டு விவாதம் நடத்தவில்லை.மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் அவர் செலவழிக்காமல் வீணாக்கியுள்ளாராம்.

தொகுதி மேம்பாட்டுக்காக எம்.பிக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 10 கோடியை சச்சின் பயன்படுத்தாமல் வீணாக்கியுள்ளார்.

ராஜ்யசபா இணையதளத்தில் இதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சச்சின் மட்டுமல்லாமல் நடிகை ரேகாவும் கூட படு மெத்தனமாக இருக்கிறாராம்.

11 நியமன எம்.பிக்கள்

11 நியமன எம்.பிக்கள்

கடந்த வருடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர்.

இதில் 11-வது எம்.பி.யாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012-ம் ஆண்டு பதவியேற்றார்.

விவாததில் பங்கேற்கவில்லை

விவாததில் பங்கேற்கவில்லை

ஆனால்,எம்.பி.யாக தேர்வான சச்சின் இதுவரை நடந்த ராஜ்யசபா கூட்டங்களில் ஓரிருமுறை கலந்துகொண்டாலும் எம்.பி.என்ற முறையில் விவாதம் நடத்தவில்லை.

ஆண்டுக்கு ரூ. 5 கோடி நிதி

ஆண்டுக்கு ரூ. 5 கோடி நிதி

இரு சபைகளிலும் உள்ள எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கியு்ள்ளது. இந்த நிதியை எம்.பி.க்கள் தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அதனையும் அவர் முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கேள்வியே கேட்டதில்லை

கேள்வியே கேட்டதில்லை

இது தொடர்பாக ராஜ்யசபா இணையதளத்தில் இதுவரை எம்.பி.யாக சச்சின் பங்கேற்றது குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில் எம்.பி.யாக அவர் கேள்விகள் கேட்டதாக சபை குறிப்புகளில் இல்லை.

 முடங்கிப் போன ரூ. 10 கோடி

முடங்கிப் போன ரூ. 10 கோடி

தொகுதி மே்ம்பாட்டு நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவலாம், தாங்கள் சார்ந்த நகரங்களின் வளர்ச்சிக்கு கொடுக்கலாம். ஆனால் அதை சச்சின் கடந்த 2 வருடங்களாக செய்யவே இல்லை. இதனால் இரண்டு ஆண்டுகளி்ல் அந்த நிதி அப்படியே உள்ளது.

ரேகாவும் அப்படித்தான்

ரேகாவும் அப்படித்தான்

இவரைப் போன்றே நடிகை ரேகா, பாடலாசியர் ஜாவியத்அக்தர் உள்ளிட்டோர் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்ற நாள் முதல் கேள்வி கேட்டதில்லை, விவாதங்களில் பங்கேற்றதில்லை.

பகுமானத்திற்காக

பகுமானத்திற்காக

சச்சின், ரேகா போன்றவர்கள் ராஜ்யசபா எம்.பி பதவியை வெறும் அலங்கார பதவியாகவே கருதுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதைப் பயன்படுத்தி மக்களுக்கு பல நல்லதைச் செய்யலாம் என்று அவர்கள் நினைப்பார்களா...

கிரிக்கெட்டில் சதம்.. எம்.பியாக முட்டை

கிரிக்கெட்டில் சதம்.. எம்.பியாக முட்டை

இந்த வகையில் கிரிக்கெட்டில் பல சதங்களை அடித்து சாதனை படைத்திருந்தாலும், சச்சின் ராஜ்யசபா எம்.பியாக பெறும் முட்டையைத்தான் எடுத்துள்ளார் இதுவரை.

English summary
Rajya Sabha membership for celebrities like Sachin Tendulkar and Rekha has become so ornamental that they do not even bother to make use of crores of rupees they get under MP Local Area Development Fund for the betterment of poor. These members anyway scored duck in discharging other responsibilities like raising questions, seeking assurances from the government and participating in debates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X