எழுத்தாளர்கள் ஜெயபாரதி.. வேலுசரவணன்.. சாகித்ய அகாடமியின் இந்த ஆண்டிற்கான புரஸ்கார் விருதுக்கு தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர்கள் ஜெயபாரதிக்கும் பால் புரஸ்கார் விருது வேலு சரவணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. இதில் இந்த ஆண்டு பால் புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் வேலு சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று யுவபுரஸ்கார் விருதுக்கு ஜெயபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sahitya Akademi announces Puraskar awards to Tamil writers Jayabharathi and Velu Saravanan

ஆதி காதலின் நினைவுக் குறிப்புகள் என்ற கவிதை தொகுப்பிற்காக ஜெயபாரதிக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. குழந்தைகள் இலக்கியத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்பை பாராட்டி வேலு சரவணனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 'கானகன்' நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் லட்சுமி சரவண குமாருக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமி சார்பில் 21 மொழிகளில் பால சாகித்ய புரஸ்கார் விருதும், 24 மொழிகளில் யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sahitya Akademi announces Puraskar award to tamil writers Jayabharathi and Velu Kumar.
Please Wait while comments are loading...