For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது: அமைச்சர் சல்மான் குர்ஷித்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்கள் நலனுக்காக இந்தியா பாடுபடுகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியா பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்காக இந்தியா வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. நாங்கள் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். இந்த நலத்திட்டப் பணிகள் எப்படி இருக்கிறது என்று அவர்களிடமே கேளுங்கள்.

Salman Khurshid says India working for welfare of Lankan Tamils

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசுவது தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் என்றார்.

மன்மோகன் சிங் ராஜபக்சேவை சந்தித்து பேசுவதற்கு திராவிட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திராவிட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே பிரதமர் ராஜபக்சேவை இன்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
External affairs minister Salman Khurshid told that India cares for the tamils in Sri Lanka and it does things for the welfare of the tamil speaking population there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X