சேலையால் வந்த பிரச்சனை.. தாலி கட்டும் முன்பு மணப்பெண்ணையே கொன்ற மணமகன்.. லிவ் இன் வேறயாமே
காந்தி நகர்: கடந்த ஒன்றரை ஆண்டுகள் வரை ஒருவரையொருவர் காதலித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்த ஜோடி தங்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்தனர். தாலி கட்ட சில மணிநேரங்களே இருந்த நிலையில் சேலையால் வந்த பிரச்சனையில் டென்ஷனான மணமகன் இரும்பு குழாயை எடுத்து மணப்பெண்ணை தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் பாவ் நகரை சேர்ந்தவர் சோனி ராதோடு. இவருக்கு வயது 24. இவருக்கும் சஜன் பாரையா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினர். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தங்களின் குடும்பத்தினரிடம் கூறினர். இருவரின் குடும்பத்தினரும் ஓகே சொன்னதால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பிறகு சோனி - சஜன் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
நேற்றைய தினம் சஜன் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் மணப்பெண் சோனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென்று அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது திருமணத்துக்கு மணமகன் சஜன் குடும்பத்தினர் எடுத்து வந்த சேலை மற்றும் சில செலவுகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. திடீரென வாக்குவாதம் முற்றவே கோயமடைந்த சஜன், தனது வருங்கால மனைவி என்று கூட பாராமல் அருகே இருந்த இரும்பு குழாயை எடுத்து ஓங்கி சோனியின் தலையில் அடித்தார். அதுமட்டுமின்றி ஆத்திரம் அடங்காத சஜன், சோனியின் தலையை பிடித்து சுவற்றில் முட்டினார்.
இதில் சோனி தலையில் பலத்த காயமடைந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்கள் சோனியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனியின் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக மணப்பெண்ணை கொன்ற சஜன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபற்றி கங்கா ஜலியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள சஜனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் ஆர்ஆர் சிந்தால் கூறுகையில், ‛‛கங்கா ஜலியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை நடந்துள்ளது. சோனியும், சஜனும் காதலித்தனர். இருவரும் திருமணத்துக்கு முன்பாகவே ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமணத்துக்கு முன்பாக காலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சோனி கொல்லப்பட்டுள்ளார். சஜன் தலைமறைவாக உள்ளார். விரைவில் கைது செய்வோர் '' என்றார்.
திருமணத்துக்கு ஒரு மணிநேரமே இருந்த நிலையில் சேலை தொடர்பான பிரச்சனையில் மணப்பெண்ணை, மணமகனை அடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதனால் காலையில் கலகலவென இருந்த திருமண வீடு மாலையில் பெரும் சோகமாக மாறிப்போனது.
-
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications