For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி, இளவரசி, சுதாகரன் உடனே பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு- பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார்.

Sasikala to be lodged in Bangalore jail

இதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த 4 பேரும் தொடர்ந்த அப்பீல் வழக்கில் தப்புக் கணக்கு போட்டு அவர்களை விடுத்து கேவலப்பட்டார் நீதிபதி குமாரசாமி.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், மற்ற 3 பேரும் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் அடைக்கப்படவுள்ளனர்.

English summary
Sasikala to be lodged in Bangalore jail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X