For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை

சசிகலாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்ப்பளித்து, 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sasikala convicted, ordered to be taken into custody

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று (பிப்ரவரி 14) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

English summary
In a major blow for AIADMK interim general secretary, Sasikala the order of the trial court convicting her has been upheld. The judgement was deolivered by a division bench comprising Justices P C Ghose and Amitava Roy on Tuesday. The order of conviction was passed by PC Ghose. Sasikala was ordered to be takwen into custody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X