For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா உன்னை ஏன் விரட்டினார் தெரியும்ல? தினகரனிடம் சீறிய சசிகலா

Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, சந்தித்துப் பேசியிருக்கிறார் தம்பிதுரை. ' ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் பகிரங்கமாக பேசி வருகின்றனர். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பற்றி சசிகலாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் தம்பிதுரை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார் தினகரன். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் இரண்டாயிரம் பேர் வரையில் திரண்டு, உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த உற்சாகத்தில், எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களில் 34 பேர் தன்னுடைய ஆதரவாளர்கள் என்பதைக் காட்டினார்.

இதை எதிர்பார்க்காத கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைத் தனித்தனியாக சந்தித்து, அவர்களது விருப்பங்களைக் கேட்டறிந்தனர். தினகரனின் நடவடிக்கைக்கு எதிராகக் களமிறங்கிய திவாகரன், கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிட்டார். இதுகுறித்து சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

தினகரன்தான் காரணம்

தினகரன்தான் காரணம்

கட்சியில் இருந்து அவரை ஓரம்கட்டுங்கள். அப்படிச் செய்தால், அமைச்சர்களும் நம் பேச்சைக் கேட்பார்கள். உங்களை முன்னிறுத்தாமல், அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதால் இவ்வளவு சிரமங்களும் ஏற்படுகிறது. டெல்லியில் யாரை சந்திக்கச் சென்றாலும், தினகரனின் நடவடிக்கைகளைத்தான் சொல்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது' எனக் கொந்தளித்தார். இதனையடுத்து, குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வர முயற்சி எடுத்தார் சசிகலா.

திவாகரன் கோபம்

திவாகரன் கோபம்

" சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்னரே, தன் மகனுக்கு இளைஞர் பாசறையில் நிர்வாகப் பொறுப்பு கேட்டார் திவாகரன். அதற்குத் தடை போட்ட தினகரன், ' சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' என அறிவித்தார். இதனை விரும்பாத திவாகரன், தினகரனுக்கு எதிராக சசிகலாவிடம் கொதிப்பைக் காட்டினார். கூடவே, தினகரனைக் கெடுக்கும் சிலர் பற்றியும் அவரிடம் எடுத்துக் கூறினார். அந்தப் பட்டியலில், தினகரனுடன் நட்பு பாராட்டும் கொங்கு மண்டலத்தின் முன்னாள்மாஜிக்கள் மூவர் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார்.

உதவியாளர் வசூல்?

உதவியாளர் வசூல்?

' மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற எண்ணத்தில் எடப்பாடிக்கு எதிராக செயல்படுகின்றனர். தினகரனை தவறாக வழிநடத்துவதே இவர்கள்தான். எம்.எல்.ஏக்களில் பலரை இவர்கள்தான் கெடுக்கின்றனர். ' பணம் கிடைத்தால் போதும்' என நினைக்கும் எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்த மூவர் அணியைத் தவிர, டெல்லியில் கோலோச்சும் தமிழகப் புள்ளி ஒருவர் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கிறார். கூடவே, தினகரன் கூடவே இருக்கும் உதவியாளரின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் செல்கிறது. அமைச்சர்கள் சிலரை மிரட்டி வசூல் செய்கிறார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

தினகரனை சந்திக்க வரும் எம்.எல்.ஏக்களிடம், ' நீதான் அடுத்த மந்திரி' எனக் கூறி வசூல் செய்கிறார். தினகரனை ஓரம்கட்டினாலே அவர்கள் அடங்கிப் போய்விடுவார்கள். எடப்பாடியை நிம்மதியாக வேலை பார்க்கவிட்டாலே போதும். சிறையில் இருந்து உங்களை வெளியே கொண்டு வந்துவிடலாம்' எனக் கூறியிருக்கிறார்.

அக்கா நீக்கியது ஏன்?

அக்கா நீக்கியது ஏன்?

இதனையடுத்து, தன்னை சந்திக்க வந்த தினகரனிடம், ' இனியாவது சரியாக நடந்து கொள். பொருளாளர் பதவியில் இருந்து அக்கா(ஜெயலலிதா) உன்னை ஏன் நீக்கினார்கள் எனத் தெரியும்னு நினைக்கிறேன். கட்சி பத்திரிகையில், உன்னுடைய படத்தைப் பெரிதாகப் போட்டதன் விளைவைத்தான் இத்தனை நாட்கள் அனுபவித்தாய்.

அதிரடி

அதிரடி

நான் இல்லாவிட்டால், இந்தக் கட்சிக்குள் உன்னால் நுழைந்திருக்கவே முடியாது. இனியும் நீ அமைதியாக இருக்கவில்லையென்றால், நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது' எனக் கொதித்திருக்கிறார். இப்படியொரு அதிரடியை தினகரன் எதிர்பார்க்கவில்லை. இனி வரக் கூடிய குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.கவுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். அதனை உறுதி செய்து கொள்ளத்தான் தம்பிதுரை வந்தார்" என விவரித்தார் கொங்கு மண்டல அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

English summary
Sasikala slams TTV Dinakaran while he met her in Bengaluru jail where she has been lodged for asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X