'கூடங்குளம்' உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: லோக்சபா தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் மீது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன .இந்த வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழக்குகள் இதுவரை வாபஸ் பெறப்படவில்லை.

கூடங்குளம் போராட்டக் குழுவினர் ஆம் ஆத்மியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் இடிந்தகரையிலேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார். முதல் முறையாக இடிந்தகரையில் இருந்து இன்று வெளியேறி நாகர்கோவில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இடிந்தகரையை விட்டு வெளியேறும் போது அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் போராட்டக் குழுவினருக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.
அதன் பின்னர் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் அதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினரை கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications