2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய கனிமொழி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமான பணம் பரிமாற்றப்பட்டதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளும் அடங்கும். இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், இது தொடர்பான வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டது.
முன்னதாக 2ஜி அலைக்கற்றை ஒத்துக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications