For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. விடுதலைக்கு எதிராக கர்நாடகா அப்பீல்- அடுத்த வாரம் விசாரணை.. என்ன முடிவெடுக்கும் சுப்ரீம் கோர்ட்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஓரிருநாட்களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இந்த மனு மீதான விசாரணையின் தங்களுக்கு பாதகமான அம்சங்களாக இருப்பதாக கருதுவதால் போயஸ் தோட்டம் கதிகலங்கித்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைகாலமாகும்.

SC to hear Karnataka's appeal against Jaya on July 1st week?

வரும் ஜூலை 1-ந் தேதி முதல் உச்சநீதிமன்றம் வழக்கமாக இயங்கத் தொடங்கும். அனேகமாக ஜூலை முதல் வாரத்திலேயே கர்நாடகாவின் அப்பீல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் 3 வாய்ப்புகளைத்தான் உச்சநீதிமன்றம் பரிசீலிக்குமாம்.

அதாவது

உச்ச நீதிமன்றம் இப்போது கோடைகால விடுமுறையில் இருக்கிறது. ஜூலை 1-ந் தேதியில் இருந்துதான் செயல்படும்.

- கர்நாடகாவின் அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படலாம்

- அல்லது கர்நாடகாவின் அப்பீல் மனுவை ஏற்றுக்கொண்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் மேல்முறையீட்டு விசாரணையை மட்டும் தொடங்கலாம்

- அல்லது

- தொடக்கத்திலேயே அப்பீல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம்

இந்த மூன்றில்தான் நிச்சயம் நடக்கும் என்கிறது உச்சநீதிமன்ற வட்டாரங்கள்..இருப்பினும் மூன்றில் 2 வாய்ப்புகள் ஜெயலலிதாவுக்கு பாதகம் என்பதால் போயஸ் தோட்டம் கையை பிசைந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள்..

English summary
Sources said that, The Supreme court will hear the Karnataka govt's appeal against Tamilnadu Chief Minister Jayalalithaa on coming July 1st week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X