நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் நெஞ்சாலை ஓர மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மதுக்கடைகளை திறக்கவும் மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகளால் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன; ஆகையால் அவற்றை மூட உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் கே. பாலு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில மற்றும் தேசிய நெஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டது. தற்போதைய மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தலாம் என்றும் அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications