For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீது மார்ச் 28-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் மார்ச் 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பகிர்வதில் பிரச்சனை நீடித்து வந்ததைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு, காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். இதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்து தீர்ப்பளித்தது.

SC special bench to hear Cauvery related cases

ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இதனிடையே 2013-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.

இருப்பினும் கர்நாடகா, தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்தே வருகிறது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு வழக்குகளை தொடர்ந்தது.

காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடாத கர்நாடகா ரூ2,500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒரு வழக்குப் போட்டது தமிழக அரசு. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக வரும் மார்ச் 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான ஆர்.கே அகர்வார், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் காவிரி வழக்குகளை விசாரிக்க உள்ளது.

English summary
SC Special bench headed by J.Chellameshwar, R.K.Agarwal, A.M.Sapre will hear Cauvery related matters on 28th March.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X