பாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

  டெல்லி: அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது, நீதிமன்றம் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் பேட்டி அளித்துள்ளார்.

  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

  SC verdict has upheld constitutional morality&democracy says Ashwani Kumar,Congress

  இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

  இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.

  இந்த தீர்ப்பு குறித்து தற்போது காங்கிரஸ் கட்சி சந்தோஷமான மனநிலையில் பதில் அளித்துள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

  இதுகுறித்து பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் '' உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டி உள்ளது. இந்த தீர்ப்பை நாம் கொண்டாட வேண்டும். நீதிமன்றம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு காப்பாற்றி இருக்கிறது. அரசியலில் பிரச்சனை செய்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு இது சவுக்கடி'' என்று அவர் கூறியுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  SC verdict has upheld constitutional morality&democracy. It's a judgement that should be celebrated. Faith of people in wisdom of SC is vindicated once again. It's set back for a party that wanted to usurp power:Ashwani Kumar,Congress on SC directing floor test in K'taka Assembly

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற