பட்டம் விடாதேன்னு சொன்னது ஒரு தப்பா.. டெல்லியை உலுக்கிய 3 கொலைகள்
பெற்றோர், தங்கையை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பட்டம் விடக்கூடாதுன்னு சொன்னது ஒரு தப்பா? இதுக்கு 3 கொலையா? நாடே அதிர்ந்து போய் கிடக்கிறது 19 வயது இளைஞர் செய்த சம்பவத்தினால்.
தெற்கு டெல்லியை சேர்ந்தவர் சர்னாம் வெர்மா. வயது 19-தான். படிப்பு ஏறவில்லை. தட்டுத்தடுமாறி, காப்பி அடிச்சி ஒருவழியா ஸ்கூல் முடிச்சாச்சு. இப்போ காலேஜ்! படிக்கிறது ஒன்னும் மண்டையில ஏறல.
[திருமணமான பெண்ணை கள்ளக்காதலனுடன் அனுப்பிவைத்த போலீஸ்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!]

பட்டம் விட ஆசை
அதனால பாதியிலேயே காலேஜ் படிப்பையும் நிறுத்தியாச்சு. இப்படி படிப்பை பாதியில கைவிட்ட சர்னாம் வாழ்வு நாசமாக போக தொடங்கியது. எல்லா கெட்ட பழக்கமும் ஒவ்வொன்னா வந்து சேர்ந்தது. ஆனால் இதையெல்லாவற்றையும் விட ஆச்சரியம், சர்னாமுக்கு பட்டம் விட ரொம்ப பிடிக்குமாம். பிடிக்கும்னு கூட சொல்ல முடியாது... வெறின்னுதான் சொல்லணும்.

கோபம் ஏறியது
காலேஜ் படிப்பு பாதியில கெட்டதுக்கு இந்த பட்டம் விடறதுகூட முக்கிய காரணம். காலேஜூக்கு கட் அடித்துவிட்டு பட்டம் விடற அளவுக்கு அடிமை இந்த சர்னாம்!! இதனாலதான் அவரது குடும்பத்தினர் கண்டித்தார்கள்... படிக்காம பட்டம் விடறியே என்று திட்டினார்கள். இதனால் கோபம் அடைந்தார் சர்னாம். பட்டம் கூடவிளையாட விடமாட்டேங்கறாங்களே என்று மனதில் ஆத்திரத்தை தேக்கிகொண்டே வந்தார்.

அதிகாலை 3 மணி
ஆனாலும் பட்டம் விடுவதும் குறையவில்லை... அம்மா, அப்பா திட்டுவதும் குறையவில்லை. அதனால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார்! பெத்த அம்மா, அப்பாவை கொலை செய்ய கத்தி, மற்றும் கத்தரிகோலை ரெடி பண்ணி வச்சுக்கிட்டார். எப்போ கொலை செய்யலாம்னு டைம் பிக்ஸ் பண்ணார். அதன்படி அதிகாலை 3 மணிக்கு பெற்றோரின் அறைக்குள் நுழைந்தார்.

பெற்றோர் - தங்கை
அங்கே தூங்கி கொண்டிருந்த இருவரையும் சரமாரியாக குத்தினார். அம்மா, அப்பா இருவரின் கழுத்திலும், மார்பிலும் கத்தி, கத்திரிகோலால் மாறிமாறி குத்தி கொண்டே இருந்தார். இதில் இருவருமே அங்கேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்கள். இருவருமே உயிரிழந்துவிட்டார்கள் என்று தெரிந்த பிறகுதான் குத்துவதை நிறுத்தினார் மகன். பெற்றோருக்கு அடுத்தபடியாக பட்டம் விடுவதை அதிகமாக திட்டியது தன் கூட பிறந்த தங்கச்சி. அந்த பெண்ணுக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த அறைக்கு கத்தியுடன் சென்ற சர்னாம், அவரையும் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பாவ்லா செய்தார்
பிறகு வேக வேகமாக கொள்ளை நடந்த வீடு போல வெளி உலகுக்கு காட்டிக் கொள்ள முயன்றார். அதற்காக ஒழுங்காக இருந்த பொருட்களை எல்லாம் கலைத்து போட ஆரம்பித்தார். பீரோ துணிமணிகளை கீழே அள்ளி போட்டார். கத்தியில் கைரேகை படியக்கூடாது என்று அதையும் அழித்தார். கொள்ளை நடந்துவிட்டதாக பாவ்லா செய்தார்.

அதிரடி கைது
விரைந்து வந்தது போலீஸ்... விசாரணையை ஆரம்பித்தது... நம்ம போலீஸ் கண்ணில் மண்ணை தூவ முடியுமா என்ன? கொஞ்ச நேரத்தில் அழிக்கப்பட்ட கைரேகையை வைத்தே சர்னாம்தான் குற்றவாளி என கண்டுபிடித்து விட்டார்கள். பிறகு என்ன ஜெயில்தான்... கம்பிதான்...களிதான்!! இவ்வளவு திட்டம் போடற அளவுக்கு இருக்கும் புத்தியை சர்னாம் தன் படிப்பிலேயும் காட்டி இருந்திருக்கலாம்!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications