பீகார் சட்டசபை தேர்தல்: 3வது கட்டமாக நாளை 50 தொகுதிகளில் வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நாளை 50 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி முதல் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கும் 2வது கட்டமாக 32 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3வது கட்டமாக 50 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
சரண், வைஷாலி, நாளந்தா, பாட்னா, போஜ்பூர், புக்சார் மாவட்டங்களில் இத்தொகுதிகள் அமைந்துள்ளன. நாளைய தேர்தலில் 808 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாரதிய ஜனதா கூட்டணியைச் சேர்ந்த 34 வேட்பாளர்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 35 வேட்பாளர்களும் ஐக்கிய ஜனதளம் சார்பில் 18 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19; மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 7 வேட்பாளர்களும் பகுஜன் சமாஜ் கட்சியின் 47 வேட்பாளர்களும் நாளைய தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுவின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி பிரசாத், பா.ஜ.க. தலைவர் நந்த் கிஷோர் யாதவ், துணை சபாநாயகர் அமரேந்திர பிரதாப் சிங் உள்ளிட்டோர் முக்கியமான வேட்பாளர்கள்.
இந்த 808 வேட்பாளர்களில் 215 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 71 பேர் பெண்கள்.
நாளைய தேர்தலில் மொத்தம் 1,45,85,177 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 78,31,388; பெண் வாக்காளர்கள் 66,86,718; 3-ம் பாலினத்தவர்- 599 பேர்.
கடந்த 2 கட்ட வாக்குப் பதிவுகளைப் போல தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications