3 பேர்தான் ஜெயிச்சாங்க.. மத்தவங்க தோத்துட்டாங்க.. இருந்தாலும் "குமுதா" ஹேப்பிதான் அண்ணாச்சி!
டெல்லி: ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீலிங் என்பார்கள். அந்தக் கதைதான் டெல்லியில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
வெற்றி பெற்ற கட்சியைப் போலவே தோல்வி அடைந்த கட்சியினரும் கூட ஒருவகையில் ஹேப்பியாகவே உள்ளனர். எனக்கும் சியர்ஸ், உனக்கும் சியர்ஸ் என்பது போல படு ஜாலியான காட்சியாக மாறியுள்ளது டெல்லி தேர்தல் களம்.
இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மூன்று பேர்தான். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, தோல்வியுற்ற பாஜக மற்றும் காங்கிரஸ்.

தேர்தலில் வெற்றி, அதுவும் அமோக வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர்
பாஜகவினரும் கூட ஒரு வகையில் மகிழ்ச்சியில்தான் உள்ளனர். அவர்களது பரம வைரியான காங்கிரஸ் கூண்டோடு காலியாகி விட்டதே என்ற சந்தோஷம் அது. அந்த வகையில் குமுதா ஹேப்பிதான் அண்ணாச்சி!
காங்கிரஸ்காரர்களுக்கும் கூட ஹேப்பிதான். காரணம், பாஜவிகவி்னர் சிங்கிள் டிஜிட்டில் சுருண்டு போய் விட்டனர் என்ற சந்தோஷம் அது.
அதாவது சீரியஸான ஒரு சண்டை சிரிப்புக் காட்சியாக மாறுவது போல ஆகி விட்டது டெல்லி தேர்தல் களம். அமீத் ஷா தலைமையிலான பாஜகவினர் குழுவினர் ரூம் போட்டு, டிஸ்கஸ் செய்து, நீ அந்தப் பக்கம் போ, நீ இந்தப் பக்கம் போ.. நீ இங்கேயே இரு, நீ அங்கேயே இரு என்று உத்திகள் வகுத்து, வியூகம் வகுத்து, என்ன மாதிரி பிரசாரம் செய்யலாம் என்று சீரியஸாக யோசித்து சந்தித்த தேர்தலை ஜஸ்ட் லைக் தட் ஊதித் தள்ளி விட்டது ஆம் ஆத்மி.
அதாவது பாஜகவினர் உடலை வருத்தி வேலை பார்த்தார்கள் என்றால் (டெல்லி முழுக்க ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டித் தள்ளி விட்டனர்), ஆம் ஆத்மியினர் தம்மாத்தூண்டு மூளையை மட்டும் வருத்தி வேலை பார்த்தார்கள். அறிவுப்பூர்வமாக செயல்பட்டார்கள்.. இதனால் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் கதையாக மாறியுள்ளது டெல்லி!
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications