Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிலில் நாற்காலியிலிருந்து கீழே விழுந்தார் யஷ்வந்த் சின்கா... தலையில் காயம்!

Subscribe to Oneindia Tamil

ஜார்கண்ட்: ஜார்கண்ட் சிறையில் உள்ள பாஜக மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்கா நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர் மின் வெட்டு ஏற்பட்டதை கண்டித்து அம்மாநில மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான கும்பல், அங்கிருந்த அதிகாரியை தாக்கி அவரை நாற்காலியில் கட்டி வைத்தனர்.

Senior BJP leader Yashwant Sinha suffers head injury

இந்த வழக்கில் யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 51 பாஜக கட்சியினர் கைது செய்யப்பட்டு ஜார்கண்ட் மாநில ஹசரிபாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் வெளியே கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப் பட்ட போதும், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர மறுத்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று சிறையில் நாற்காலியில் அமர்ந்திருந்த யஷ்வந்த் சின்கா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சுவரில் மோதியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறை மருத்துவர்களும், அவர்களைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்காவின் தனிப்பட்ட குடும்ப மருத்துவரும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர்.

கீழே விழுந்ததில் தலையில் சிறிய வீக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தம் வரவில்லை எனவும் சிறை வளாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தேவைப்பட்டால் சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம் என அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

Senior BJP leader Yashwant Sinha, who is lodged in the Hazaribagh Central Jail on Friday suffered head injury when he fell and hit a wall, jail sources said here.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+