For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பீலை அச்சிடவே 3 மாதங்கள் ஆகும்னு 'அம்மா'வின் சட்டக்குழுவுக்கு தெரியாதா?

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிடுவதற்கு. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும். மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும் என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Senior lawyers question Jaya team's legal strategy

இந்த குழப்பத்திற்கு அதிமுகவின் வக்கீல்கள் குழுவே காரணம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது. அவர்களின் குழப்பமான, தெளிவில்லாத செயல்பாடுகளே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில்,

மேல்முறையீடு என்பது சினிமா நோட்டீஸ் அல்ல உடனே அச்சிடுவதற்கு. பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அச்சிட்டு, சரிபார்த்து, எண்ணிக்கை அளிக்க வேண்டும்.

மேல்முறையீடுகளை தயாரிக்கவே உயர் நீதிமன்றத்திற்கு 3 மாதங்கள் ஆகும். மேல்முறையீட்டு சட்ட நடவடிக்கைள் முடியவே 2 ஆண்டுகள் ஆகும்.

ஒன்று ஜெயலலிதாவின் சட்டக்குழுவுக்கு இது தெரியவில்லை அல்லது காலதாமதம் ஆகும் என்று அவரிடம் தெரிவிக்க பயப்படுகிறார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Senior lawyers are of the opinion that Jayalalithaa's legal team strategy is the worst.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X